இப்போ உங்களுக்கு பிப் மதிப்பை எப்படி தெரிந்து கொள்வது என்று உங்களுக்கு தெரியும். இபோது உங்களுடைய லாப நஷ்ட கணக்கை எப்படி கணக்கிடுவது என்பதை பார்போம்.
நாம் இப்பொழுது USD ஐ வாங்கி CHF ஐ விற்பதாக வைத்துகொள்வோம்.
அப்போதைய விலை 1.4525 / 1.4530 என வைத்து கொள்வோம்.
நாம் ஓர் ஸ்டாண்டர்ட் லாட்(100,000 units) 1.4530 இல் வாங்குகிறோம்.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு அதன் மதிப்பு 1.4550 ஆக உயர்வதாக வைத்து கொள்வோம். நீங்கள் இப்பொழுது இந்த trade ஐ முடிக்க நினைத்தால் இப்பொழுது விற்க வேண்டும் ஏனனில் நீங்கள் முதலில் வாங்கி உள்ளீர்கள்.
நாம் வாங்கியதற்கும் விற்றதற்கும் உள்ள வித்தியாசம் 1.4530 கழித்தால் 1.4550 கிடைப்பது .0020 அல்லது 20 pips ஆகும்.
நம்முடைய கணக்கின் படி
(.0001/1.4550) x 100,000 = $6.87 per pip x 20 pips = $137.40

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.